UAE Tamil Web

அமீரகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கும் 50 புதிய திட்டங்கள் – அபுதாபி இளவரசர் அறிவிப்பு..!

sheikh zayed

அமீரகத்தின் 50 வது ஆண்டுவிழா பல்வேறு விதங்களில் கொண்டாடப்பட்டு வருகையில் அபிதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இம்மாத இறுதியில் 50 புதிய தேசியத் திட்டங்களை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமீரகத்தின் எதிர்கால நிலை கருதியும் எதிர்வரும் தலைமுறையின் வளர்ச்சிப் பயணத்தை உறுதி செய்யும் நோக்கோடு இந்தத் திட்டங்கள் அமைய இருக்கின்றன. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ,” இந்த திட்டங்களில் அமீரக மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களுடைய படைப்பாற்றல் மற்றும் அறிவை வெளிப்படுத்தவேண்டும். இது நம்முடைய எதிர்காலத்திற்கு புதிய வாய்ப்புகளை வழங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

sheikh zayed
0 Shares
Share via
Copy link