UAE Tamil Web

ஷார்ஜாவின் புதிய டூரிஸ்ட் ஸ்பாட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் – ஈத் அல் அழ்ஹா பெருநாள் தினத்தில் மட்டும் 50,000 பேர் விசிட்!

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக ஷார்ஜாவில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டு பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டதுதான் அல் சுஹுப் ரெஸ்ட் ஹவுஸ். கோர் ஃபக்கானின் மலைப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கோர் ஃபக்கான் நகரத்தில் இருந்து 30 நிமிட பயணத் தொலைவிலும் ஷார்ஜாவின் மத்திய பகுதியில் இருந்து 90 நிமிட பயணத் தொலைவிலும் இந்த புதிய சுற்றுலா தளம் அமையப்பெற்றுள்ளது.

SEWA completes Al Suhub Rest House electrical works in Khorfakkan's Al-Medifi - Construction Week Online
Credit : Construction week online

அமீரகத்தின் கிழக்கு கடற்கரை, ஓமன் வளைகுடா உள்ளிட்டவற்றை இந்த அல் சுஹுப் ரெஸ்ட் ஹவுஸ்ல் இருந்ந்து கண்டுகளிக்கலாம். கண்கவர் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான கட்டிடத்தில் நகர்புறத்தின் அழகிய தோற்றத்தையும் மேலிருந்து காண முடியும். சுற்றுலா தளத்தை சுற்றி 8,600 மரங்கள் நட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மனதிற்கு இதமாக இயற்கை எழில் நிறைந்த அமைப்பை அல் சுஹுப் பெற்றுள்ளது. இந்த சுற்றுலாத் தளத்தை அமீரக உச்ச சபை உறுப்பினரும் ஷார்ஜா ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அவர்கள் கடந்த மாதம் 15ம் தேதி திறந்து வைத்தார்.

Sharjah Ruler unveils 10,250m2 Al Suhub Rest Area in Khorfakkan - MEP Middle East
Credit : Sharjah 24

தொடந்து வந்த ஈத் அல் அழ்ஹா பெருநாள் விடுமுறையில் அல் சுஹுப் ரெஸ்ட் ஹவுஸ் சுற்றுலா பயணிகளின் ஹாட் ஸ்பாட்டாக மாறிப்போனது. ஈத் அல் அழ்ஹா தினத்தில் மட்டும் 50,000 பேர் அல் சுஹுப் ரெஸ்ட் ஹவுசிற்கு வந்து சென்றுள்ளனர். வரும் காலத்தில் முக்கிய சுற்றுலா தளமாக இதனை மாற்றுவதற்கு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் அருகிலேயே 3 கிலோ மீட்டர் தொலைவில் ரஃபிசா அணையும், ஜபெல் அல் ஷேக் டவரும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

9 Shares
Share via
Copy link