52 பயணிகளுடன் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட பேருந்து அபுதாபி நெடுஞ்சாலையில் விபத்து!

A bus carrying 52 pilgrims was involved in a traffic accident on Tuesday morning, according to Abu Dhabi Police.

ஹஜ் புனிதப்பயணத்திற்கு சென்று கொண்டிருந்த பேருந்து அபுதாபி நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது.

ஹஜ் புனித பயணத்தை முடித்து விட்டு பேருந்து மக்காவில் இருந்து ஓமன் நோக்கி இன்று காலை சென்றுகொண்டு இருந்தது. எதிர்பாராத விதமாக அபுதாபி நெடுஞ்சாலையில் மெட்டல் தடுப்பான் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக அபுதாபி போலீஸ் கூறுகையில், 52 பயணிகளை ஏற்றிச்சென்ற இந்த பேருந்து விபத்துக்குள்ளானதாக தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தப் பயணிகள் அனைவரும் மக்காவிலிருந்து ஓமம் நோக்கி தன்னுடைய புனித பயணத்தை முடித்து விட்டு சென்றுள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.

இந்த விபத்து ஓமன் நோக்கி சென்றுகொண்டிருந்த போது அபுதாபி ஷைக் கலீபா பின் சயத் சாலையில் அரங்கேறியுள்ளது.

இந்த விபத்தில் காயம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியாகவில்லை.

அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான இடம், உணவு மற்றும் பானங்கள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து இயக்குனர் மற்றும் அபுதாபி போலீஸ் பாட்ரோல் கர்னல் மொஹமத் சலேம் அல் ஷேஹி அவர்கள் கூறியுள்ளார்.

Loading...