ராஸ் அல் கைமாவில் சுற்றுச்சூழல் விதியை மீறியதற்காக 529 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது!

529 people fined for environmental violations during Eid holidays in UAE

நடந்து முடிந்த ஈத் விடுமுறை நாட்களில் ராஸ் அல் கைமாவில் சுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்காக 529 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை பற்றி பொதுச் சேவைத் துறையின் ஆலோசகர் அஹ்மத் அல் ஷெஹி கூறுகையில், 28 சுற்றுச்சூழல் ரோந்துப் படையினர் மூலம் டிக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளது, என்று கூறினார்.

அமீரக விதிகளை மீறி தவறிழைத்த சில குடியிருப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்கள் விலங்குகளின் கழிவுகளை பொதுச் சாலைகளில் கொட்டியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

அல் ஷெஹி கூடுதலாக, நிர்ணயிக்கப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு விதிமுறைகளுக்கு பொதுமக்கள் இணங்குவதை உறுதி செய்வதற்காக 72 ஆய்வாளர்கள் வரை பணியமர்த்தப்பட்டிருந்தனர், என்று கூறினார்.

பெரும்பாலான சுற்றுசூழல் விதி மீறல்கள் ஜெபல் ஜெய்ஸ் மலையில் அரங்கேறியுள்ளது. கடந்த ஈத் அல் அதா விடுமுறை நாட்களில் மட்டும் நாடு முழுவதிலும் இருந்து 25,000 பார்வையாளர்கள் இங்கே வந்து சென்றுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மீறல்களின் பட்டியலில் குப்பைகளை கொட்டுவது, வாகனங்களில் இருந்து கழிவுகளை கீழே கொட்டுவது, கழிவுநீர் கசிவு மற்றும் விலங்குகளின் கழிவுகளை கொட்டுவது ஆகியவை முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விருந்து உபசரிப்பின் போது விலங்குகள் வெட்டப்படுவதில் 23 வரை விதிமீறல்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source : Khaleej Times

Loading...