UAE Tamil Web

கொரோனா விதிமுறை மீறல் : 53 உணவகங்களுக்கு சீல் – துபாய் அரசு அதிரடி..!

abudhabi food security

2021 ஆம் ஆண்டின் ஜனவரி – மார்ச் கால கட்டத்தில் துபாய் நகராட்சி வெளியிட்டுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறிய 53 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாவும் 1,133 உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி தெரிவித்துள்ளது.

துபாய் நகராட்சியின் உணவுப் பாதுகாப்புத் துறையில் உள்ள உணவுக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சுல்தான் அலி அல் தஹேர் இதுபற்றிப் பேசுகையில் 2021 ன் முதல் காலாண்டில் 13,775 ஆய்வுகள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். இதன்மூலம் 12,438 உணவு நிறுவனங்கள் கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றிவருவது தெரியவந்திருக்கிறது. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறிய 53 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாவும் 1,133 உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தஹேர் குறிப்பிட்டார்.

சமூக விலகலைக் கடைபிடிக்காதது, சுய பாதுகாப்புப் பொருட்களான முகக்கவசம், கையுறை ஆகியவற்றை உணவு தயாரித்தலின்போது உபயோகிக்காதது, அங்கீகரிக்கப்பட்ட கிருமிநாசினி மற்றும் சுத்திகரிப்புப் பொருட்களைப் பயன்படுத்தாதது ஆகியவை முக்கிய குற்றங்களாக கருதப்படுகிறது.

“ஆய்வின்போது உணவு நிறுவனங்கள் மேற்கொள்ளும் சுகாதார, சுத்திகரிப்புப் பணிகளின் தினசரிப் பதிவேடுகள், உணவுப் பொருட்களை வாங்குதல், உணவு தயாரித்தல், காட்சிப்படுத்துதல், உணவுப் பொருளை பூச்சி மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்க பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறைகள் குறித்தும் ஆய்வுக்குழு அறிந்துகொள்கிறது” என தஹேர் குறிப்பிட்டார்.

வாடிக்கையாளர்கள் தரும் புகார்களின் அடிப்படையில் தொடர்ந்து ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தஹேர் குறிப்பிட்டார்.

இந்த ரமலான் காலத்தில் உணவு நிறுவனங்கள் உணவுப் போக்குவரத்து, சேமித்தல், தயாரித்தல், உணவுப் பொருளை காட்சிப்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளை எவ்வாறு மேற்கொள்கின்றன எனக் கண்காணித்துவருவதாக தஹேர் தெரிவித்தார்.

abudhabi food security
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap