துபாயின் ராஷ் அல் கோர் பகுதியில் அமைந்துள்ள கார் சந்தையில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நாத் அல் செபா, அல் குசைஸ், போர்ட் சயீத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். மளமளவென தீ பரவியதால் அருகில் இருந்து 7க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தீ பரவியது. கொளுந்து விட்டெரிந்த தீயை நீண்ட நேரம் போராடி வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர விபத்தில் லட்சக்கணக்கான திர்ஹம்ஸ் மதிப்பிலான 55 கார்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியதால் அங்கிருந்த பொருட்களும் தீக்கிரையாயின. எனினும் யாருக்கும் எந்தவித உயிர் சேதமும் காயமும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரிவித்துள்ள துபாய் காவல்துறை இது குறித்து விசாரணை செய்து வருகிறது.
