UAE Tamil Web

அமீரகத்தில் 6 நாட்கள் விடுமுறை – உங்களுடைய பிளான் என்ன?

holiday

அமீரகத்தில் அடுத்த மாதம் ஈத் அல் அத்ஹா பண்டிகைக்கு 6 நாட்கள் விடுமுறை கிடைக்கும் எனத் தெரிகிறது. இதனால் பல விடுமுறை விரும்பிகள் குஷியில் உள்ளனர்.

அடுத்தமாதம் அதாவது ஜூலை 19 ஆம் தேதி (திங்கட்கிழமை) அராபத் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அதைத்தொடர்ந்து ஈத் அல் அத்ஹா பண்டிக்கைகாக ஜூலை 20,21,22 ஆகிய தேதிகள் (செவ்வாய் – வியாழன்) விடுமுறை விடப்பட இருக்கிறது. ஆகவே, வெள்ளி, சனி வார விடுமுறைகள் சேர்த்து மொத்தம் ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பிறை பார்த்தபிறகே தேதிகள் இறுதிசெய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் நீண்ட வார விடுமுறையாக அது அமையும். இதற்கு முன்னர் ஈத் அல் பித்ர் பண்டிகைக்காக மே 11 – 15 ஆம் தேதிவரையில் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈத் அல் அத்ஹாவைத் தொடர்ந்து வரும் விடுமுறை தினங்கள் குறித்து கீழே காண்போம்.

ஹிஜ்ரி புத்தாண்டு

முகமது நபி (ஸல்) மெக்காவில் இருந்து மதீனாவிற்கு சென்றதை நினைவுகூரும் நாளாக ஹிஜ்ரி புத்தாண்டு பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட்  12 ஆம் தேதி வியாழக்கிழமை இந்த விடுமுறை வரவிருக்கிறது. ஆகவே அந்த வாரமும் கூடுதலாக மக்களுக்கு விடுமுறை கிடைக்கும்.

முகமது நபி (ஸல்) பிறந்தநாள்

முகமது நபி (ஸல்) அவர்களுடைய பிறந்தநாள் அக்டோபர் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு வழக்கமாக ஒருநாள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இம்முறை அக்டோபர் 21 ஆம் தேதி வியாழக்கிழமை என்பதால் அமீரக மக்கள் கூடுதல் விடுமுறை தினங்களை அனுபவிப்பார்கள்.

தியாகிகள் தினம்

அமீரகத்தினைக் காக்கும்பொருட்டு தங்களது இன்னுயிரையும் தியாகம் செய்த மகத்தான வீரர்களின் நினைவைக் கொண்டாடும் இந்நாள் டிசம்பர் 1 ஆம் தேதி புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

அமீரக தேசிய தினம்

தியாகிகள் தினத்தைத் தொடர்ந்து டிசம்பர் 2, 3 ஆம் தேதிகளில் அமீரக தேசிய தினம் கொண்டாடப்பட இருக்கிறது. ஆகவே அப்போதும் மக்களுக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் பலரும் உற்சாகமாக இருக்கின்றனர்.

holiday
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap