UAE Tamil Web

எக்ஸ்போ 2020 க்கு செல்பவர்களுக்கு சம்பளத்துடன் 6 நாட்கள் விடுமுறை – துபாய் இளவரசர் அதிரடி..!

sheikh-hamdan-expo-2020-dubai-site

துபாயில் அடுத்த மாதம் முதல் EXPO 2020 கண்காட்சி தொடங்க இருக்கிறது. 6 மாதங்கள் வரை நடைபெறும் இந்த பிரம்மாண்ட கண்காட்சியில் உலக நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க இருக்கின்றனர். கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க துபாய் அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் துபாய் கண்காட்சியை குடும்பத்துடன் கண்டுகளித்து மகிழ அரசு ஊழியர்கள் ஊதியத்துடன் 6 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை கண்காட்சி நடைபெறும் 6 மாதங்களில் எப்போது வேண்டுமேயானாலும் எடுத்துக் கொள்ளலாம் என துபாய் இளவரசர் தெரிவித்துள்ளார். துபாயில் வசிக்கும் அனைவரும் கட்டாயம் கண்காட்சிக்கு வருகை தந்து ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். துபாய் இளவரசரின் இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள் குதூகலம் அடைந்துள்ளனர். அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் Expo 2020 கண்காட்சி மார்ச் 31 2022ல் நிறைவு பெறுகிறது.

sheikh-hamdan-expo-2020-dubai-site
26 Shares
Share via
Copy link