UAE Tamil Web

அடேங்கப்பா இது நம்ம லிஸ்டலைய இல்லையே.. இரண்டே நாளில் ஜெபல் ஜெய்ஸ் மலையில் 60,000 பேரா..?

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரமான மலைச் சிகரமான ஜெபல் ஜெய்ஸ் மலைப்பகுதிக்கு ஈத் அல் நாளின் முதல் மற்றும் இரண்டாவது நாட்களில் 17,000 கார்கள் சென்றுள்ளாதாக ராஸ் அல் கைமா பொதுச் சேவைத் துறை அறிவித்துள்ளது.

ராஸ் அல் கைமா பொது சேவைகள் துறையின் இயக்குநர் ஜெனரல் அஹ்மத் முகமது அல் ஹம்மாதி தெரிவிக்கையில், விடுமுறையின் முதல் இரண்டு நாட்களில் ஜெபல் ஜெய்ஸுக்குச் சென்று ஈத் அல் பித்ரைக் கொண்டாடிய பார்வையாளர்கள், மலையேறுபவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 60,000 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பல நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெவ்வேறு தேசங்கள் மற்றும் வயதினரைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

ஈத் அல்-பித்ர் விடுமுறையின் முதல் மற்றும் இரண்டாவது நாட்களில், எமிரேட்டின் மிகப்பெரிய பொதுப் பூங்காவான Saqr பொதுப் பூங்காவுக்கு 1000-க்கும் மேற்பட்ட கார்களில் 3,000 பார்வையாளர்கள் வந்ததாக அல் ஹம்மாதி தெரிவித்தார்.

அமீரகத்தின் புகழ்பெற்ற இயற்கை அடையாளங்கள், பூங்காக்கள், கடற்கரைகள் மற்றும் பொது பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா வசதிகள் ஆகியவற்றில் தற்போதைய ஈத் விடுமுறையில் அதிக மக்கள் வருகைத்தந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap