UAE Tamil Web

துபாய் மற்றும் ஷார்ஜாவில் இருந்து சென்ற விமானங்கள்.. சிக்கிய கடத்தல் தங்கம் – மீண்டும் பரபரப்பான திருச்சி விமான நிலையம்

தமிழகத்தை பொறுத்தவரை திருச்சியில் இருந்து தான் அதிக அளவிலான விமானங்கள் நமது துபாய் உள்பட சிங்கப்பூர், மலேஷியா போன்ற பல நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றது. பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மீட்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் விமானங்கள் சீராக இயங்கி வருகின்றன.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்களும் தொடர்கதையாகியுள்ளது. துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து மட்டும் கடந்த இரண்டு நாட்களில் 63 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் ஷார்ஜாவில் இருந்து சென்ற பயணி ஒருவரிடம் இருந்து சுமார் 12 லட்சம் மதிப்பிலான தங்கம் மேலும் துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் வந்த பயணியிடம் இருந்த மடிக்கணினியில் இருந் 28 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கமும் தேடுதல் வேட்டையில் சிக்கியது.

9 சிறிய கட்டிகளாக மறைத்து எடுத்துவரப்பட்டு தங்க கட்டி உள்பட கடந்த இரண்டு நாட்களில் மட்டும் திருச்சி விமான நிலையத்தில் 63 லட்சம் மதிப்பிலான தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap