அமீரகத்தில் இன்று வானம், பகுதி மேகமூட்டமாக இருக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.
அமீரகத்தில் இன்று காலை 6.15 மணிக்கு ரக்னாஹ் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 7.1°C பதிவாகியிருக்கிறது.
#The_lowest_temperature_recorded over the country today morning was 7.1°C in Raknah at 06:15 UAE Local.
— المركز الوطني للأرصاد (@NCMS_media) December 16, 2020
நாட்டின் உட்பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாக இருக்கும் என NCM தெரிவித்திருக்கிறது.
இன்று இரவு மற்றும் நாளை காலை வேளைகளில் ஈரப்பதம் மிகுந்து காணப்படும் எனவும் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்பு அதிகமிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேசானது முதல் மிதமானது வரையில் காற்று வீசக்கூடும்.
அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடலில் லேசானது முதல் மிதமானது வரையில் சீற்றம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.