இந்த 7 தவறுகள் வாகன ஓட்டுனர்கள் செய்தால் 800 திர்ஹம் அபராதம்.!

அபுதாபி காவல்துறை UAE வாகன ஓட்டிகளுக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

முன்னெச்சரிக்கை தேவை என்பது உண்மை தான். திசைதிருப்பப்பட்ட முறையில் வாகனம் இயக்குவது ஒரு சில வினாடிகளில் துயர விபத்தை ஏற்படுத்தலாம்.

வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவது என்பது பல ஓட்டுனர்களுக்கு ஒரு பொதுவான கவனச்சிதறல் ஆகும். இந்த குற்றத்திற்கு 800 திர்ஹம் அபராதம் மற்றும் நான்கு கருப்பு புள்ளிகள் ஓட்டுநர் உரிமத்தில் சேரும் என்று அரசாங்க பட்டியலில் உள்ளது. மேலும், வேறு ஏதேனும் கவனசிதறல்களை ஏற்படுத்தும் முறைக்கும் இந்த சட்டம் பொருந்தும்.

RoadSateyUAE வலைத்தளத்தின்படி, வாகனம் ஓட்டும் போது மற்ற பொதுவான கவனசிதறல்கள் பின்வருமாறு:

  • உங்களுடன் வாகனத்தில் பயணிப்பவர்கள், குழந்தைகள் பேச்சிலோ அல்லது வளர்ப்பு செல்லப்பிராணிகள் செயலிலோ கவன சிதறல்கள் ஏற்படலாம்.
  • புகைபிடித்தல், உணவு உண்பது அல்லது பருகும் நேரத்தில் கவன சிதறல்கள் ஏற்படலாம்.
  • ரேடியோ அல்லது ஒளி அமைப்பு சரி செய்யும் நேரத்தில் கவன சிதறல்கள் ஏற்படலாம்.
  • பொருட்களை கொடுக்க, எடுக்க செல்லும் நேரத்தில் கவன சிதறல்கள் ஏற்படலாம்.
  • வாகனம் ஓட்டும் போது ஜி.பி.எஸ்ஸைப் பயன்படுத்தி ஒரு வரைபடத்தை பார்த்துக்கொண்டே செல்வது கவன சிதறல்களை ஏற்படுத்தலாம்.
  • வாகனம் ஓட்டிக்கொண்டே அலங்காரம் செய்வது கவன சிதறல்களை ஏற்படுத்தலாம்.

மேற்குறியவற்றை, நீங்கள் வாகனம் ஓட்டும்போது செய்தால் 800 திர்ஹம் அபராதம் மற்றும் நான்கு கருப்பு புள்ளிகள் ஓட்டுநர் உரிமத்தில் சேரும்.