UAE Tamil Web

வேலை தேடி அமீரகம் வந்திருக்கீங்களா? கையில காசு இல்லையா… இந்த ரெஸ்ரெண்ட்களுக்கு போங்க வயிறும், மனசும் இலவசமா நிறையும்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் எல்லாருக்குமே இரக்கம் குணம் அதிகம் என்பதை யாருமே மறுக்க முடியாது. அதனால் தான் அவர்களால் இத்தனை உயரம் உயர முடிந்தது. அவர்கள் செய்யும் தொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கலாச்சாரம் மற்றும் சமூகத்தில் வேரூன்றி உள்ளது. அது தனிநபர்களுக்கு மட்டும் இருப்பது அல்ல.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பில்லியன் மீல்ஸ் முயற்சியின் கீழ், கடந்த ஆண்டு 600 மில்லியன் உணவுகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில், பல ஆசிய மற்றும் அரேபிய உணவகங்கள் தேவைப்படும் blue-collar தொழிலாளர்கள் மற்றும் விசிட் விசாவில் உள்ளவர்களுக்கு, குறிப்பாக குறைந்த வருமானத்தில் இந்த நாட்டுக்கு வந்திருப்பவர்களுக்கு இலவச உணவை வழங்குகின்றன.

இந்த உணவகங்கள் முக்கியமாக அரபு, சிங்கப்பூர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய உணவு வகைகளை வழங்குகின்றன. இலவச உணவை வழங்கும் உணவகங்களின் பட்டியல் கீழே:

Foul W Hummus:

யாரும் பட்டினி கிடக்கக் கூடாது என்பதற்காக அரபு உணவகம் இலவச உணவு வழங்குகிறது. ஃபவுல் டபிள்யூ ஹம்முஸ், ஃபலாஃபெல், மௌடபால், ஹம்முஸ் கொண்ட பைன் நட்ஸ், சாண்ட்விச்கள் மற்றும் பலவற்றின் மெனுவிலிருந்து மக்கள் தேர்வு செய்யலாம்.

Fatta Kawareh:

அபு ஹெயிலில் உள்ள இந்த எகிப்திய உணவகம் தேவைப்படுபவர்களுக்கு இலவச உணவையும் வழங்குகிறது. உணவக மேலாளர் அதியா யூசப் கூறுகையில், கடந்த ஆண்டு புனித ரமலான் மாதத்தில் உணவு வாங்க முடியாத மக்கள் உணவகத்திற்குள் நுழைந்ததைக் கவனித்தபோது இந்த முயற்சி தொடங்கப்பட்டது.

Shinwari Tikka:

டெய்ராவில் அமைந்துள்ள இந்த உணவகம் உதவியை கேட்டு வருவோருக்கு இலவச உணவை வழங்குகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு நான்கு பேர் சாப்பிட வருகிறாகள். சில நேரங்களில் இன்னும் அதிகமாக இலவச உணவை வழங்கி வருகிறோம் என்று உணவகத்தின் உரிமையாளர் கைர் அல் அமீன் கூறினார்.

Khair Darbar:

அல் குவோஸில் உள்ள உணவகம் blue collar ஊழியர்களுக்கு அல்லது அதைக் கோருபவர்களுக்கு இலவச உணவை வழங்குகிறது.

Pak Khair Darbar:

டெய்ரா துபாயில் அமைந்துள்ள பாக் கைர் தர்பார் பாகிஸ்தானிய மற்றும் இந்திய உணவு வகைகளை வழங்குகிறது. மேலும் கேட்கும் மக்களுக்கு இலவச உணவும் வழங்கப்படுகிறது.

yummy dosa:

இந்திய உணவகம் இரத்த தானம் செய்பவர்களிடமிருந்தும், உணவுக்கு பணம் இல்லாதவர்களிடமிருந்தும் கட்டணம் வசூலிப்பதில்லை. யம்மி தோசாவின் நிர்வாக இயக்குநர் ஜுகல் பரேக் கூறுகையில், இரத்த தானம் செய்பவர்களுக்கு இலவச உணவு எப்போதும் இருக்கும். எனவே இரத்த தானம் பெற்றவர்கள் துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள மூன்று உணவகங்களில் ஏதேனும் ஒன்றில் பணம் செலுத்தாமல் உணவகத்தின் உணவுகளை அனுபவிக்கலாம்.

karachi star:

பாகிஸ்தான் மற்றும் இந்திய உணவுகளை வழங்கும் உணவகம், பணம் இல்லாமல் போன விசிட் விசாவில் ஏழைகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு இலவச உணவை வழங்கி வருகிறது. வேலையில்லாதவர்கள், அல்லது விசிட் விசாவில் இருப்பவர்கள் அல்லது விசா காலாவதியானவர்கள் ஷார்ஜாவின் முவைலா மற்றும் சாஜாவில் உள்ள எங்கள் உணவகங்களுக்கு வரலாம், அவர்களுக்கு நாங்கள் இலவச உணவை வழங்குவோம் என்று கராச்சி ஸ்டார் உரிமையாளர் ஷாஹித் அஸ்கர் பங்காஷ் கூறினார். இந்தச் சேவை தேவைப்படும் மக்களுக்கு அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் வழங்கப்படுகிறது.

இந்த உணவகங்கள் அவர்கள் சாப்பிடுவது இலவச உணவு என்பதை வெளிப்படையாக சொல்லாமல் பரிமாறுபவர்களுக்கு ஒரு வார்த்தையை வைத்து கொள்கிறார்கள். இதனால், அருகில் இருப்பவர்களுக்கு அவர்கள் இலவச உணவினை சாப்பிடுவது தெரியாது. அது அந்த நபருக்கும் சுய கௌரவத்தினை கெடுக்காமல் இருக்கும் என்கிறார்கள்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap