ஷார்ஜாவில் 72,941 போலியான பொருட்கள் பறிமுதல்..!

72,941 fake products including chargers seized in Sharjah

தொழில்துறை மண்டல எண் 18இல் (industrial zone number 18) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது அதிர்ச்சியளிக்கும் வகையில் சுமார் 72,941 போலியான பொருட்கள், ஷார்ஜா பொருளாதார மேம்பாட்டுத் துறையால் (SEDD) கைப்பற்றப்பட்டன.

இதில் சார்ஜர்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் 36,470 திர்கம் மதிப்புள்ள பிற போலியான பொருட்களும் அடங்கும். குறிப்பாக, நன்கு அறியப்பட்ட பிரபலமான வர்த்தக முத்திரைகளைக் கொண்ட காலி பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

SEDD தலைவர் சுல்தான் அப்துல்லா பின் ஹடா அல் சுவைதி கூறுகையில், “இதுபோன்ற வணிக மோசடிகள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல், லாபம் அடைவதை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன” என்று கூறினார்.

மேலும், இதுபோன்ற வணிக மோசடி அல்லது மீறல்கள் பற்றிய புகார் தெரிவிக்க, 80080000 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...