UAE Tamil Web

புஜைராவில் டாக்ஸி மோதி 73 வயது முதியவர் உயிரிழப்பு..!

புஜைராவில் வேகமாக வந்த டாக்சி முதியவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவான நேற்று புஜைரா அல் டல்லா ரவுண்டானா அருகே உள்ள அல் நகில் தெருவை நோக்கி சென்றுகொண்டிருந்த டாக்ஸி சாலையில் நடந்துச் சென்ற 73 வயதுடைய அரபு நாட்டு முதியவர் மீது மோதியது, இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து புஜைரா காவல்துறையின் போக்குவரத்து ஜெனரல் மற்றும் ரோந்து துறையின் இயக்குனர் கர்னல் சலே முகமது அப்துல்லா அல் தன்ஹானி, முதியவர் ரவுண்டானா அருகே சாலையை கடக்க காத்துக்கொண்டிருந்தார். ஆனால் அந்த வழியில் வேகமாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையைக் கடக்குமாறும், வாகன ஓட்டிகள் சாலைகளில் கவனம் செலுத்துமாறும், போக்குவரத்து விதிகளை மீறி சாலையை கடக்க வேண்டாம் என்றும் சாலையைக் கடக்கும்போது குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் கருத்தில் கொள்ள வேண்டயது அவசியமாகும் என்று முகமது அப்துல்லா அல் தன்ஹானி வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap