UAE Tamil Web

துபாயில் இருந்து சென்னை வந்த விமானம்.. “அயன் பட பாணியில்” ஹெராயின் கடத்தல் – இனிமா கொடுத்து 86 மாத்திரைகளை எடுத்த சுங்கத்துறை

சினிமா பணியில் திருடுவது என்பது அண்மைக்காலமாக அதிகரித்துவிட்டது என்று தான் கூறவேண்டும். அந்த வகையில் உகாண்டாவில் இருந்து துபாய் வந்து பின் இங்கிருந்து சென்னை விமான நிலையத்திற்கு போதைப்பொருளுடன் சென்ற ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு துபாயில் இருந்து சென்னை வரும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரி கமிஷனர் உதய்பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து துபாயில் இருந்து சென்னை வந்த பயணிகள் அனைவரையும் சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

அப்போது தான்சானியா நாட்டை சேர்ந்த ஜோசப் பாட்ரிக் என்ற 28 வயது வாலிபர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரை அழைத்து உடல் முழுவதும் சோதனை செய்துள்ளனர். பின்னர் அவரது உடைமைகள் முழுக்க சோதனை செய்ய அதிலும் எதுவும் சிக்கவில்லை.

இறுதியில் அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது வயிற்றில் மர்ம பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அவருக்கு இனிமா கொடுக்கப்பட்டது. இறுதியில் அவர் வயிற்றில் இருந்து ஹெராயின் அடங்கிய சுமார் 86 மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 8 கோடி இருக்கலாம் என்றும் 1.266 கிராம் போதைப்பொருளை அவர் கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. தற்போது ஜோசப் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகின்றது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap