UAE Tamil Web

அமீரகத்தில் கண்டறியப்பட்ட 8500 ஆண்டு பழமையான வீடுகள்

அமீரகத்தில் 8500 ஆண்டுகள் பழமையான வீடுகள் இருப்பதாக கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தொல்லியல் துறை நடத்திய ஆய்வுகளில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்கள் அபுதாபிக்கு மேற்கு பகுதியில் உள்ள காகா தீவில் அமைந்துள்ளன.

தொல்பொருள் ஆய்வுத் துறை ஒரு அறிக்கையில், அந்த தீவில் ஒரு சிறிய சமூகம் வாழ்ந்ததற்கான வீடுகளின் கட்டமைப்புகள் உள்ளதாகவும் நூற்றுக்கணக்கான கலைப்பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

காகா தீவில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்பு பாரம்பரியத்தின் புதுமைக்கும் பழமைக்கும் ஒரு சான்றாகும்.

அமீரகத்தில் உள்ள பழமையான கட்டிடங்கள் தற்போது காகா தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள மராவா தீவில் உலகின் பழமையான முத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தீவுகளின் இருப்பிடம் குறித்து உறுதியான முடிவுகளை எடுப்பதற்கு முன், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் போதுமான ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.

2 Shares
Share via
Copy link