39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

துபாய் : அரசின் கொரோனா நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக 88 சதவிகித மக்கள் தகவல் – கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்ட இளவரசர்..!

survey

கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் அரசின் சிறப்புத் திட்டத்தின் மூலமாக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதில், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் துபாய் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 10 ல் 9 பேர் தெரிவித்திருக்கின்றனர்.

பெருநோய் தாக்கம் உச்சத்தில் இருக்கும் போதும், அரசு இயந்திரம் தொடர்ந்து இயங்குவதை உறுதிப்படுத்தும் பொருட்டு அரசால் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தங்களுக்கு திருப்தியளிப்பதாக 89 சதவிகித மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்ட துபாயின் பட்டத்து இளவரசரும், துபாய் நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum) இதுகுறித்துப் பேசுகையில்,” குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நமது அணிகளை நினைத்து பெருமைப்படுகிறேன். நம் தேசத்தின் அற்பணிப்புக்கான பலனை நாம் இப்போது அனுபவிக்கிறோம். எதிர்வரும் சவால்களை சந்திக்கும் விதத்தில் அரசு இயந்திரம் தயாராக இருக்கிறது. கொரோனா தாக்கத்தில் இருந்து குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் விசிட்டிங் விசாவில் வந்தவர்களைப் பாதுகாக்கவும் நோய் காரணமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்படாமலிருக்கவும் துபாய் அரசு ஆக்கப்பூர்வமான மற்றும் துரித நடவடிக்கைகளை எடுத்தது ” என்றார்.

அமீரகத்தின் கொரோனா தாக்கத்தை செயல்திறன் அணுகுமுறையுடன் கட்டுப்படுத்திய அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுடைய தொலைநோக்கு பார்வைக்கு நன்றி தெரிவிப்பதாக துபாய் பட்டத்து இளவரசர் தெரிவித்தார்.

துபாய் அரசு சிறப்புத் திட்ட உறுப்பினர்களை சந்தித்த இளவரசர்,” கொரோனா நடவடிக்கைகள் குறித்த கருத்துக்கணிப்பில் மக்கள் அளித்திருக்கும் வரவேற்பானது, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட திட்டமிட்ட மற்றும் விரிவான நடவடிக்கைகளின் பிரதிபலிப்பே ஆகும். துபாய் மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அயராது உழைத்த பொது மற்றும் தனியார் துறைகளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!