UAE Tamil Web

துபாய் மற்றும் ஷார்ஜாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு 9 நாட்கள் பெருநாள் விடுமுறை!

eid

ரமலான் மாதம் 22 நாட்களை கடந்துவிட்ட நிலையில் அமீரகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான ஈத் அல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 30, சனிக்கிழமை முதல் மே 6 வெள்ளி வரை விடுமுறை நாட்கள் இருக்கும். பின்னர் மே 7 மற்றும் 8 ஆம் தேதி சனி-ஞாயிறு வார விடுமுறை இருக்குமேயானால் அரசு ஊழியர்களுக்கு 9 நாட்கள் ஈத் அல் பித்ர் விடுமுறையாகும்.

இந்நிலையில் அமீரகத்தில் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 9  நாட்கள் விடுமுறை போன்றே துபாய் மற்றும் ஷார்ஜா எமிரேட்டுகள் அரசு ஊழியர்களுக்கான விடுமுறையை நீட்டித்துள்ளது.

முன்னதாக ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரைபெருநாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது துபாய் மற்றும் ஷார்ஜா விடுமுறை நாட்களைthது அதிகப்படுத்தியுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap