அமீரகத்தில் வரவிருக்கும் ரமலானை முன்னிட்டு பல ஷாப்பிங் மால்களில் என்னற்ற பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி தீவிரமாக அளிக்கப்பட்டு வருகின்றது.
அமீரகத்தில் இன்னும் 2 வாரங்களில் ரமலான் வரவிருக்கும் நிலையில் Sharjah Co-Op மார்கெட் விலைகளை 90 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது. இச்சிறப்பு சலுகையில் 20,000 பொருட்களுக்கு அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ஷார்ஜா Sharjah Co-Op நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மஜித் சலிம் அல் ஜுனைத் கூறுகையில், “ரமலான் மாதத்தில் மக்களின் மீதான நிதிச் சுமைகளை குறைக்கும் நோக்கில் இந்த அதிரடி தள்ளுபடி சலுகை செய்யப்பட்டுள்ளது” என்றார்.
ரமலான் மாதத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இந்த சிறப்பு சலுகைகள் தொடங்கும் என்றும், அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் 90 சதவீத தள்ளுபடி விற்பனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு 4வகையான RAMADAN BASKET அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் விலை 49 திர்ஹம்ஸ் முதல் 399 திர்ஹம்ஸ் வரை இருக்கும் எனவும் அத்துடன் 50 சதவீதத்திற்கும் அதிகமான தள்ளுபடி விலையில் வாடிக்கையாளார்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரிசி, சர்க்கரை, மாவு, எண்ணெய் போன்ற அடிப்படை பொருட்கள் அடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கார், வீட்டு ஃபர்னிச்சர் பெருட்கள், சமையலறை பொருட்கள், உபகரணங்கள் மற்றும் பரிசு அட்டைகளுக்கான ரேஃபிள் டிராக்களும் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த டிராவில் தேர்ந்தெடுப்படும் ஒரு நபருக்கு கார், மேலும் 15 வெற்றியாளர்களின் ஒவ்வொரு வெற்றியாளருக்கும் 10 ஆயிரம் திர்ஹம்ஸ் மதிப்புள்ள வீட்டு ஃபர்னிச்சர்கள் பொருட்கள், 15 வெற்றியாளர்களில் ஒவ்வொரு வெற்றியாளருக்கும் 5 ஆயிரம் திர்ஹம்ஸ் மதிப்புள்ள சமையலறை பொருட்கள் மற்றும் உபகரணங்கள், 100 வெற்றியாளர்களுக்கு 500 திர்ஹம்ஸ் மதிப்புள்ள பரிசு அட்டைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.