UAE Tamil Web

துபாயில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 948 பணிப்பெண்கள் கைது.. காரணம் என்ன..?

அமீரகத்தில் சட்டவிரோத முறையில் வீட்டுப் பணியாளர்களாக வேலைப் பார்த்துக்கொண்டிருந்த பல்வேறு நாடுகளை சேர்ந்த 948 பேரை துபாய் காவல்துறை  கைது செய்துள்ளது.

துபாய் காவல்துறையின் ஊடுருவல் துறையின் இயக்குநர் கர்னல் அலி சேலம் கூறுகையில், “புனித ரமலான் மாதத்தில் வீட்டுப் பணியாளர்களாக பலர் விதிமுறைகளை மீறி பணிகள் செய்து வருகின்றனர்.

இது போன்று சட்ட மீறலில் பணிபுரியும் இவர்கள் தங்கள் ஸ்பான்சர்களிடமிருந்து தப்பித்து வெவ்வேறு வீடுகளில் போலியான பெயர்களில் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இன்றி வேலைகள் செய்து வருமானம் பெற்று வருகின்றனர்” என்று அலி சேலம் கூறினார்.

முன்னதாக, உரிமம் இல்லாத ஆட்சேர்ப்பு நிறுவனங்களில் இருந்து வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் குடும்பங்களுக்கு எச்சரித்தது.

தனியார் ஆட்சேர்ப்பு அலுவலகங்கள், சில நிபந்தனைகளை பூர்த்தி செய்து அமைச்சகத்திடம் உரிமம் பெற்ற பின்னரே வீட்டு வேலைக்கு ஆட்களை சேர்க்க அனுமதிக்க இயலும் என்றும் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் தெரிவித்தது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap