UAE Tamil Web

“அது டிராம் வர்ற டிராக் சீக்கிரம் காரை எடுங்க” – எதிரே வந்த டிராம் .. பாதையில் சிக்கிய கார் – வீடியோ..!

car tram

துபாய் மரினாவில் நேற்று டிராம் செல்லும் பாதையில் ஒருவர் காரை ஒட்டியிருக்கிறார். பாதையில் சிக்கிக்கொண்ட காரை டிரைவர் வெளியே எடுக்க முயற்சிக்கும் போது காரின் பன் புறத்தில் டிராம் வருவது தெரிய வந்திருக்கிறது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் கையில் கொடியுடன் டிராமை நிறுத்தும்படி கூச்சலிட்டிருக்கின்றனர். இதனால் சரியான நேரத்தில் டிராம் நிறுத்தப்பட்டது. பொதுமக்களின் துரித செயல்பாட்டினால் மோசமான விபத்து தடுக்கப்பட்டிருக்கிறது.

வாகனவோட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்கவேண்டும் என காவல்துறை அடிக்கடி வலியுறுத்திவந்தாலும் சிலர் இப்படி அஜாக்கிரதையுடன் நடந்துகொள்வது விபத்திற்கு வழிவகுக்கிறது என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

 

car tram
10 Shares
Share via
Copy link