கடந்த மாதம் துபாயில் பல ஏர்கன் பெல்லட் குண்டு காயங்களால் பாதிக்கப்பட்ட ஒரு நாயை துபாய் இளவரசர் தத்தெடுத்தபோது, “நாயிடம் இப்போது பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள், மகிழ்ச்சியுடன் வாழ நான் உத்தரவாதம் அளிக்கிறேன்” என்றார்.
சில வாரங்களுக்குப் பிறகு, அவர் அளித்த வாக்குறுதி போலவே அந்த நாய் தற்போது காட்சியளிக்கிறது.
முன்னதாக பலத்த காயங்களால் உயிருக்கு போராடிய (கிரேஸ்) எனும் நாயை ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தத்தெடுத்து, தனது அன்பான கவனிப்பால் அந்த நாய் நம்பமுடியாத அளவிற்கு தேர்ச்சி பெற்றுள்ளது.
பலத்த காயங்களால் உயிருக்கு போராடிய அந்த நாய் குறித்து சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் காயமடைந்த நாயை தாம் பராமறிப்பதாக கூறி அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், ஷேக் ஹம்தான் அந்த நாயுடன், “ஹலோ கிரேஸ் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்” என்று கூறினார் மேலும் நாயுடன் ஷேக் ஹம்தான் விளையாடுவதையும் வீடியோவில் காணலாம்.
View this post on Instagram
முன்னதாக தனது பராமரிப்பில் நாய் பாதுகாப்பாக இருக்கும் என்று ஷேக் ஹம்தான் உறுதியளித்த என்பது குறிப்பிடத்தக்கது.
