அமீரக காவல்துறையைப் பொறுத்தவரையில் மக்களுக்கு உதவுதல், அவர்களது துயரங்களில் பங்கெடுத்தல் ஆகியவையே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அப்படி நேற்று துபாயின் பரபரப்பான சாலை ஒன்றில் ட்ரக், பழுதாகி நின்றிருக்கிறது.
அதனை ஓரங்கட்ட முடியாமல் டிரைவர் தவிக்கவே, அங்குவந்த காவல்துறை அதிகாரி ஒருவர் தனியாளாக ட்ரக்கை தள்ளியிருக்கிறார். இதனை வீடியோ எடுத்த ஜசீம் என்னும் நபர் அதனை டிக்டோக்கில் வெளியிட்டிருக்கிறார்.
View this post on Instagram
டிரக் டிரைவருக்கு உதவ முன்வந்த காவல்துறை அதிகாரியின் இந்தச் செயலை மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
