UAE Tamil Web

சாலையில் தீப்பிடித்த வாகனம்: இந்த சாலையில் செல்வோர் உஷார் – எச்சரிக்கும் துபாய் காவல்துறை..!

UAE ROAD

துபாய்: அல் ருவையா மேம்பாலத்தில் இருந்து ஷார்ஜா செல்லும் எமிரேட்ஸ் சாலையில் வாகனம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் மெதுவாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து துபாய் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,”அல் ருவையா மேம்பாலத்தில் இருந்து ஷார்ஜா செல்லும் எமிரேட்ஸ் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, மெதுவாக செல்லுங்கள். அதுவே பாதுகாப்பானது” எனத் தெரிவித்துள்ளது.