துபாய்: புர் துபாய் பகுதியின் காலித் பின் வாலித் தெருவில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் உடனேயே கட்டிடத்தினை விட்டு வெளியேறி சாலைக்கு வந்துவிட்டனர்.
உடனடியாக தீயணைப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், விரைந்து வந்த வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீ மற்ற கட்டிடங்களுக்கும் பரவாமல் தடுத்தனர். தீ முழுமையாக அணைக்கப்பட்டதும் களத்திற்கு நேரடியாக வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயங்களோ உயிரிழப்போ ஏற்படவில்லை என துபாய் சிவில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
View this post on Instagram
