UAE Tamil Web

சுழன்றடித்த கடலலையில் சிக்கிய மகள்களை காப்பாற்றச்சென்ற தந்தை – மீட்புப் போராட்டத்திற்கு நடுவே ஹாரட் அட்டாக் ஏற்பட்டதால் நேர்ந்த சோகம்..!

Abu-Dhabi-dad-large

அபுதாபியில் உள்ள டேவேரா அகுமா நிறுவனத்தில் மேனஜராகப் பணிபுரிந்துவந்த ட்ரேவோர் பெல்லிங் (45) கொடை விடுமுறையைக் கழிக்க குடும்பத்தினருடன் போர்ச்சுக்கல் சென்றுள்ளார்.

அப்போது கடலில் தனது 12 மற்றும் 9 வயது மகள்கள் நீச்சல் அடிக்கச் சென்றபோது வலுவான கடல் அலையினால் சிக்கினர். இதனைக்கண்ட பெல்லிங் உடனடியாக நீருக்குள் குதித்தார். தனது மகள்களை மீட்கும் பணியில் பெல்லிங் ஈடுபடும் வேளையில் துரதிருஷ்டவசமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நினைவிழந்த அவரை ஆம்புலன்ஸ் வந்து மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றது.

இருப்பினும் மருத்துவர்கள் பெல்லிங் மரணமடைந்ததாக அறிவித்தனர். இதனையடுத்து அவருடைய நிறுவனம் பெல்லிங்கின் குடும்பத்தினருக்காக நிதி திரட்டி வருகிறது. இதுவரையிலும் 46,606 யூரோக்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் 150,000 யூரோக்கள் திரட்டுவதே இலக்கு எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Abu-Dhabi-dad-large
0 Shares
Share via
Copy link