UAE Tamil Web

துபாயில் முதலாளிக்கு எதிராக சூனியம் செய்த பணிப்பெண் கைது

துபாயில் தனது முதலாளிக்கு எதிராக சூனியம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆசிய நாட்டைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு விவரங்களின்படி, வீட்டில் வேலை செய்து வரும் பணிப்பெண் ஒருவர், தனக்கு எதிராக சூனியம் செய்து வருவதாக சந்தேகித்து வீட்டின் உரிமையாளரான பெண் காவல்துறையிடம் புகார் வழக்கு கொடுத்துள்ளார்.

வீட்டின் உரிமையாளரான பெண் குளியலறையில் இருந்தபோது நள்ளிரவில் விசித்திரமான முணுமுணுப்பு ஸ்பதம் கேட்டதாக கூறினார்.

பணிப்பெண்ணை வீட்டின் உரிமையாளர் விசாரித்தபோது, தான் எந்த மந்திரமும், சூனியமும் செய்யவில்லை என்று மறுத்துள்ளார். பின்னர் பணிப்பெண்ணின் அறையை சோதனையிட்டதில், தாயத்துகளுடன் கூடிய பொம்மையின் படமும், பணிப்பெண்ணின் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரத்தம் கொண்ட ஒரு துணியும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து உதவி வழக்குரைஞர் அலுவலகத்தின் தலைவர் ஃபஹத் அப்துல் கரீம், விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் அப்பணிப்பெண் தனது உறவினரான மத போதகருடன் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் வீட்டு உரிமையாளர் தன்னை நன்றாக நடத்த வேண்டும் என்பதற்காக பணிப்பெண் மந்திரம் செய்ய மத போதகருடன் தொடர்புக்கொண்டதில், அவர் 200 திர்ஹம்ஸ் செலுத்துமாறு கேட்டுள்ளார்.

பின்னர் மத போதகர், பணிப்பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் பொம்மையின் படத்தை அனுப்பி தொலைபேசியில் வைத்திருக்கும்படி கூறியுள்ளார். இதன் மூலம் வீட்டின் உரிமையாளரின் நடத்தையை கட்டுப்படுத்தும் என்று அப்பெண்ணிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தனது முதலாளிக்கு எதிராக சூனியம் செய்த ஆசிய நாட்டைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap