துபாயில் கத்தியால் குத்தி கொள்ளையடித்த 35 வயதான குற்றவாளிக்கு துபாய் குற்றவியல் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விடுத்துள்ளது.
துபாய் அல் ரக்கா பகுதியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்படி, அல் ரக்கா பகுதியில் மாலை நேரத்தின்போது நடைபயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருந்தவரிடம் இந்த குற்றவாளி இடைமறித்து பணத்தை கேட்டு மிறட்டியுள்ளார். அவர் தர மறுத்த நிலையில் வயிற்றில் கத்தியால் குத்தி, அவரிடமிருந்து 300 திர்ஹம்ஸை திருடி விட்டு தப்பித்து ஓடிவிட்டார்.
பின்னர் குற்றவாளி குறித்து விசாரனை நடத்திய பிறகு அவரே கத்தியுடன் கையும் கள்வுமாக போலிசாரிடம் சிக்கிக்கொண்டார்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் ஆசிய நாட்டியச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவும் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது.