துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கடந்த ஒரு மாதத்தில் 152 மரங்களை நட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த காந்தி ஜெயந்தியன்று துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியைத் துவங்கியது. இந்தியன் பீப்பிள்ஸ் ஃபாரம் (IPF) எனப்படும் அமீரக வாழ் இந்திய மக்கள் அமைப்பு இந்த நிகழ்வினை ஒருங்கிணைத்தது.
இந்நிலையில் நேற்று ஷார்ஜாவில் உள்ள இண்டர்நேஷனல் ஸ்கூலில் மரக்கன்று நடும் விழா நிறைவு பெற்றிருக்கிறது. கடந்த ஒரு மாத காலத்தில் 152 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
A month long tree plantation drive organized by Indian People’s Forum(IPF) Sharjah in support with @cgidubai concluded yesterday at Sharjah International Private School. A total of 152 plants were planted to commemorate #GandhiJayanti as part of #AmritMahotsav celebrations. https://t.co/PkeMnFt0IR pic.twitter.com/TbM3hlb1hA
— India in Dubai (@cgidubai) October 30, 2021
