உலகப் புகழ்பெற்ற பைக் கிராண்ட் பிரிக்ஸ் ஆஃப் பெல்ஜியம் (Bike Grand Prix of Belgium) போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், துபாய் காவல்துறையைச் சேர்ந்த வீரர் ஒருவர் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
85 கிலோமீட்டர் தூரமுள்ள தொலைவை சக போட்டியாளர்களை பின்னுக்குத்தள்ளி, துபாய் காவல்துறையைச் சேர்ந்த வீரர் முதலிடத்தைப் பிடித்ததாக துபாய் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அத்துடன் நடைபெற்ற போட்டியின் வீடியோ ஒன்றினையும் துபாய் காவல்துறை இணைந்துள்ளது. பந்தயத்தில் மாஸ் காட்டிய துபாய் காவல்துறை அதிகாரிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன.
A rider from #DubaiPolice has won the first place in the 85 kilometre race, clinching the title of Bike Grand Prix of Belgium. pic.twitter.com/JXni1VQ2kC
— Dubai Policeشرطة دبي (@DubaiPoliceHQ) September 12, 2021