UAE Tamil Web

வீடியோ: லண்டன் தெருவில் அஜ்மான் ஆட்சியாளரை சந்தித்தவுடன் ஓடிச்சென்று கட்டிப்பிடித்து முத்தமிட்ட துபாய் இளவரசர்..!

hamdan

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சமீபத்தில் தனது இரட்டைக் குழந்தைகளுடன் லண்டனுக்குச் சென்றிருந்தார்.

அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் உருவாக்கப்பட்ட பந்தைய குதிரை வளர்ப்பு மையமான குடோல்பின் ஸ்டேபிள்-க்கு தனது இரட்டைக் குழந்தைகளுடன் இளவரசர் சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் லண்டன் தெரு ஒன்றில் நடக்கையில் அஜ்மானின் ஆட்சியாளரும் உச்ச சபையின் உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹுமைத் பின் ரஷீத் அல் நுவைமி அவர்களை துபாய் பட்டத்து இளவரசர் பார்த்தவுடன் ஓடிச்சென்று கட்டியணைத்து நெத்தியில் முத்தமிடும் வீடியோ இப்போது வைரலாகியிருக்கிறது.

ஃபஸ்ஸா என்று செல்லமாக அழைக்கப்படும் துபாய் இலவறார் ஹம்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

hamdan
20 Shares
Share via
Copy link