UAE Tamil Web

துபாய் ஷேக் முகமது பின் ஜயீத் சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி..!

துபாய் ஷேக் முகமது பின் ஜயீத் சாலையில் அபுதாபி நோக்கி சென்ற கனரக வாகனம் ஒன்று  தீப்பிடித்து எரிந்தது.

அப்பகுதியில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறி சந்தை அருகே லாரியில் ஏற்பட்ட தீ விபத்து கேபிள் கோளாறால் ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக, துபாய் காவல்துறையின் போக்குவரத்து இயக்குனர் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் கூறுகையில், அதிகாலை 4:15 மணிக்கு செயல்பாட்டு அறைக்கு தீ பற்றிய தகவல் கிடைத்தது, பின்னர் உடனடியாக பாதுகாப்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. சிவில் பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் தண்ணீர் பீச்சி தீயை அணைத்ததாக அல் மஸ்ரூய் கூறினார்.

லாரியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு நெரிசல் நிலவியது. சீரான போக்குவரத்தை உறுதிசெய்ய சாலைகள் சுத்தம் செய்யப்பட்டு, வாகன நெரிசல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap