UAE Tamil Web

துபாய் விமான நிலையத்தில் “அந்த மாதிரிப்” பொருளுடன் சிக்கிய பிரபல நடிகை..!

DXB

ஐக்கிய ராஜ்யத்தைச் (UK) சேர்ந்த பிரபல ரியாலிட்டி ஷோ நடிகை ஒருவர் நேற்று துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். விமான நிலைய விதிமுறைகளின்படி அவரது உடமைகளை ஸ்கேன் செய்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

அப்போது அந்த நடிகையுடைய பையில் பிளஷர் டாய் (Pleasure Toy) எனப்படும் சுய இன்பக் கருவி இருந்திருக்கிறது. இதனையடுத்து அவர் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார். அமீரக சுங்கத்துறை விதிமுறைகளின்படி இந்தக் கருவிகள் தடை செய்யப்பட்டவையாகும்.

இதுபோன்ற பொருட்கள் “பாலியல் சாதனங்கள்” என்ற வகைமையின் கீழ் வருபவை. இவற்றை அமீரகத்தில் பயன்படுத்துவதோ, அமீரகத்திற்குள் எடுத்துவருவதோ தடை செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த நடிகையிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். அதே விமானத்தில் பயணித்த அவருடைய நண்பர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்நிகழ்வை குறிப்பிட்டுள்ளார்.

INSTA

DXB
3 Shares
Share via
Copy link