UAE Tamil Web

நாங்கள் பழமையை நினைத்து ஏங்குபவர்கள் அல்ல; புதிய எதிர்காலத்தைப் படைப்பவர்கள் – துபாய் ஆட்சியாளரின் மாஸ் வீடியோ..!

sheikh mohammed

உலகப் பிரசித்திபெற்ற துபாய் ஏர்ஷோவின் 17 வது ஆண்டு கண்காட்சி துபாயில் வரும் நவம்பர் 14 -18 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த பிரம்மாண்டமான வண்ணமய கண்காட்சியினை பொதுமக்கள் தங்களது குடும்பங்களுடன் இலவசமாக ஸ்கைவியூ கிராண்ட்ஸ்டாண்ட் (Skyview Grandstand)-ல் கண்டுகளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில்,” கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் மையமாக அமீரகம் திகழ்கிறது. துபாய் ஏர்ஷோ எப்போதும் பிரம்மாண்டமான ஒன்றாகும். வெற்றி என்பது எப்போதும் முன்னேறுவது தான். அமீரகம் நேரத்தோடு போட்டிபோடும் வல்லமையைக் கொண்டுள்ளது. நாம் நம்முடைய எதிர்காலம் என்ன என்பதில் தெளிவாக இருத்தல் வேண்டும். நாங்கள் எப்பொதும் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பவர்கள் கடந்தகாலத்தை அல்ல. ஒரே இடத்தில் நிற்பது பயனில்லாத ஒன்றாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

துபாய் ஆட்சியாளரின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

sheikh mohammed
9 Shares
Share via
Copy link