அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். அமீரகத்தில் ஒருவருக்கு கடலில் மிதந்து வந்திருக்கிறது. ஆமாம். நண்பர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர், வலையை விரித்துவிட்டு மீனுக்காக காத்திருந்திருக்கிறார்.
அப்போது சற்றுத் தொலைவில் வெள்ளையாக ஏதோ மிதப்பது போல் இருந்திருக்கிறது. படகை அதற்கு அருகில் செலுத்துமாறு தனது நண்பருக்கு சைகை காட்டியிருக்கிறார் அவர்.
அருகே சென்று பார்த்தால் அனைத்தும் அமீரக திர்ஹம்ஸ். படகைச்சுற்றி மிதந்த திர்ஹம்சை வலையை உபயோகித்து வெளியே எடுத்திருக்கிறார். இறுதியாக எண்ணிப்பார்த்ததில் 14,692 திர்ஹம்ஸ் இருந்திருக்கிறது.
View this post on Instagram
9Gag நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் இச்சம்பவம் நிகழ்ந்த தேதி குறிப்பிடப்படவில்லை. அதில் கமெண்ட் போட்ட நபர் ஒருவர்,” எனக்கும் இதுபோன்றே நிகழ்ந்தால் நான் அதனை வீடியோ எடுக்கமாட்டேன். பணத்தினை ரகசியமாக எனது நபர்களுடன் பங்கிட்டுகொள்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சொகுசுக் கப்பலில், “ஆனந்தக் கூத்தாடும் போது” இப்படி பணத்தை வாரி இறைக்கும் பழக்கம் பல “பெரிய கைகளுக்கு” இருக்கிறது. அதுதான் இப்படிபணம் மிதப்பதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
உங்களுக்கும் இதேபோல பணம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? கமெண்டில் தெரிவியுங்கள்.