கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக பரிசோதனை மையங்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் அபுதாபி சுகாதார அமைப்பான சேஹா வாகன ஓட்டிகளுக்கான பிரத்யேக Drive in கொரோனா பரிசோதனை மையங்களை திறந்துள்ளது. லிவா, சிலா, தல்மா ஆகிய 3 இடங்களில் இந்த பரிசோதனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அமீரகத்தில் Drive in கொரோனா தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இந்த மையங்களில் நாசல் ஸ்வாப் மற்றும் லேசர் முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 500 நாசல் ஸ்வாப், 100 லேசர் பரிசோதனைகளை செய்யும் வசதிகள் கொண்டவை. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் இந்த கொரோனா பரிசோதனை மையங்களை வாகன ஓட்டிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.