UAE Tamil Web

அபுதாபி: அல் BATEEN EXECUTIVE விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிப்பு

அபுதாபியில் உள்ள Al Bateen Executive விமான நிலையத்தில் ஓடுபாதையை மேம்படுத்துவதற்காக இரண்டு மாதங்களுக்கு மேல் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி Al Bateen Executive விமான நிலையம் மே 11 முதல் ஜூலை 20 வரை பராமரிப்பு  பணி காரணமாக மூடப்படுகிறது. முக்கியமாக தனியார் ஜெட் விமானங்கள் ஜூலை 21 முதல் மீண்டும் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.

அல் Al Bateen Executive Airport மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா பிராந்தியத்தின் (MENA) முதல் பிரத்யேக ஜெட் விமான நிலையமாகும்.

அபுதாபி சர்வதேச விமான நிலையம் 1982 இல் திறக்கப்படும் வரை, 1960-களில், தலைநகரின் முதல் முக்கிய விமான நிலையமாக இந்த விமான நிலையம் முதலில் பயன்பாட்டிற்கு வந்தது. பின்னர் விமான நிலையத்தின் செயல்பாடுகளை நிர்வாகித்து உலகத்தரம் வாய்ந்த விமான நிலையமாக மாறியது.

தற்போது, ​​ 50 தனியார் ஜெட் விமானங்களை நிறுத்தும் திறன் கொண்டதாக இந்த விமான நிலையம் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap