அபுதாபியில் உள்ள நிகழ்வுகள், சுற்றுலா இடங்கள் மற்றும் கலாச்சார தளங்களுக்கு தடுப்பூசி செலுத்தாத பார்வையாளர்களுக்கான விதிமுறைகளை அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் குழு புதுப்பித்துள்ளது.
அமீரகத்தில் கோவிட்-19 தொற்று நோய்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமீரக அரசு பிப்ரவரி 15 முதல் படிப்படியாக நீக்கி வருகிறது.
அதன் எதிரொலியாக அமீரகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அவசர நெருக்கடி மற்றும் தேசிய ஆணையத்தின் பேரிடர் மேலாண்மையான (NCEMA) அறிவித்திருந்தது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு எமிரேட்ஸும் தங்களது கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அபுதாபியில் இன்று வெளியிடப்பட்ட புதிய அறிவுறுத்தலின்படி, அபுதாபி சுற்றுலா இடங்கள் மற்றும் கலாச்சார தளங்களுக்கு தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் பெறபட்ட PCR பரிசோதனையில் நெகடிவ் சான்றிதழ்கள் இருந்தால் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
புதுப்பிக்கப்பட்ட இந்த வழிகாட்டுதல் கொரோனா தொற்று நோயின் மீட்புக் கட்டத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.