அபுதாபியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு இந்தியர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அபுதாபியில் பெட்ரோலிய டேங்கர் வெடிப்பில் பலியான 2 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தூதரக அதிகாரிகள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்னாேக் உள்ளிட்ட அமீரக அதிகாரிகளுடன் இணைந்து, உயிரிழந்தவர்களை உடல்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, தூதரகம் ட்வீட் செய்துள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த 6 பேரில் இருவர் இந்தியர்கள் என்றும், அவர்கள் சிகிச்சை முடிந்து நேற்றிரவு வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்தின் (அட்னாேக்) மூன்று பெட்ரோலிய டேங்கர்களில் முசாஃபாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பாகிஸ்தானியர் ஒருவரும் உயிரிழந்தார். 2 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என அட்னோக் தனது மூன்று ஊழியர்களின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
Of the 6 injured, 2 are Indian nationals. After receiving medical treatment they were discharged yesterday night.
We thank the UAE Government @MoFAICUAE & @AdnocGroup for their support. @DrSJaishankar @MEAIndia @cgidubai @IndianDiplomacy @vipulifs @PMOIndia @IndiaUNNewYork (2/2)— India in UAE (@IndembAbuDhabi) January 18, 2022