UAE Tamil Web

அபுதாபியில் டிரைவராக பணிபுரியும் இந்தியருக்கு 25 மில்லியன் திர்ஹம்ஸ் பரசு..!

அபுதாபியில் பிக் டிக்கெட் டிரா நேற்று ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஹரிதாசன் மூதட்டி வாசன்னி என்ற இந்தியர் 25 மில்லியன் திர்ஹம்ஸை வென்றுள்ளார்.

அபுதாபியில் டிரைவர் வேலை செய்துவரும் ஹரிதாசன், தான் வெற்றிபெற்றது குறித்து தெரிவித்துள்ளதாவது, “நான் வெற்றி பெற்றதை என்னால் நம்ப முடியவவில்லை, எதிர்பார்க்கவும் இல்லை. என்ன சொல்வது என்று கூட தெரியவில்லை. இந்த 25 மில்லியன் திர்ஹம்ஸ் இந்திய ரூபாய்க்கு 500 மில்லியன்” என்று தெரிவித்துள்ளார்.

கேரளாவின் மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிதாசன், கடந்த பத்து ஆண்டுகளாக அபுதாபி, அல் அய்ன் பகுதிகளில் பணிபுரிந்து வருகிறார். தற்போது முஷாஃபா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

ஹரிதாசனுடன் டிரைவராக வேலை செய்துவரும் ஹம்சா குட்டி கூறுகையில், “வென்ற 25 மில்லியன் திர்ஹம்ஸ் தொகையை 10 பேர் பகிர்ந்து கொள்ள உள்ளோம். நான் அவருடைய நண்பர் மட்டுமல்ல, மலப்புரம் மாவட்டம் திரூரில் இருக்கும் அவரது வீட்டிற்கு அருகே தான் நானும் உள்ளேன். நாங்கள் வழக்கமாக ஒன்றாக டிக்கெட்டுகளை வாங்குவோம். ஆனால் இந்த முறை என்னால் வாங்க முடியவில்லை. அவர் வென்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 2022ஆம் ஆண்டு அவருக்கு சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் குடும்பத்தை சிறந்த முறையில் பார்த்துக்கொள்வதுடன், ஏழைகளுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. வாழ்க்கை குறுகியது, எனவே நாம் சில நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்” என்றார் ஹம்சா.

ஹரிதாசன் டிசம்பர் 30 ஆம் தேதி 232976 என்ற டிக்கெட்டை வாங்கி வெற்றி பெற்றுள்ளார். மேலும் மற்றொரு இந்தியரான அஸ்வின் அரவிந்தக்ஷன் என்பவரும் டிசம்பர் 16 அன்று வாங்கிய 390843 என்ற டிக்கெட்டுடன் இரண்டாம் பரிசாக 2 மில்லியன் திர்ஹம்ஸை பரிசாக வென்றுள்ளார்.

67 Shares
Share via
Copy link