டிசம்பர் மாதத்தின் ஒவ்வொரு வாரமும் 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசு தேர்ந்தெடுக்கப்படும் பங்கேற்பாளர் ஒருவருக்கு வழங்கப்படும் என பிக் டிக்கெட் நிர்வாகம் முன்னதாக அறிவித்திருந்தது. அதன்படி டிசம்பர் 9 ஆம் தேதி இந்தியாவைச் சேர்ந்த ஹாருன் ஷேக் என்பவருக்கு ஒரு மில்லியன் திர்ஹம்ஸ் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது.
அபுதாபி பிக் டிக்கெட்அமீரகத்தில் வசித்துவருபவர் ஹாருன் ஷேக். இதுகுறித்து அவர் பேசுகையில்,” என் வாழ்க்கையில் என்றும் அதிர்ஷ்டம் இருந்ததில்லை. இந்த போட்டி எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது” என்றார்.
View this post on Instagram
ஹாருனுக்கான காசோலையை அவரது இடத்திற்கே சென்று வழங்கியிருக்கிறார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவரான ரிச்சர்ட். இதன்மூலம் 25 மில்லியன் அல்லது 2 மில்லியன் அல்லது 4 பணப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் ஷேக்.