கடந்த ஆண்டு நவம்பர் 28 அன்று, ‘ரெட் வீக் பிக் கேஷ் கிவ்அவே’ டிராவில் கம்மு குட்டி என்பர் 1 லட்சம் திர்ஹம்ஸை வென்றார்.
இது குறித்து பிக் டிக்கெட் குழுவினர் தொலைபேசி மூலம் கம்மு குட்டிக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் கம்மு குட்டி நம்பவில்லை. பிக் டிக்கெட் குழு அவரிடம், தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதை அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடக தளங்களைக் காண அறிவுறுத்தினர்.
இருப்பினும், இது ஒரு மோசடி என்பதில் கம்மு குட்டி உறுதியாகிவிட்டார். பிக் டிக்கெட்டின் அதிகாரப்பூர்வ ஃபோன் எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை மூன்று மாதங்களுக்கும் மேலாக அவர் ஏற்காமல் மறுத்து வருகிறார்.
அது போன்று இந்த ஆண்டு ஜனவரி 25 அன்று பிக் டிக்கெட்டின் ஸ்ரீந்திரன் பிள்ளை அஜித் 250,000 திர்ஹஸ் வென்றார். பிக் டிக்கெட் குழு அவருக்கு தொடபுக் கொள்ள முயற்சி செய்த போதிலும், வெற்றியாளரைத் தொடர்புகொள்ள இயலவில்லை.
இது குறித்து பிக் டிக்கெட் டிரா தொகுப்பாளர் ரிச்சர்ட் கூறுகையில் “கடந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு நாளும், தவறிய வெற்றியாளரை தொடர்புக் கொள்ள முயற்சித்து வருகிறோம். அதுமட்டுமின்றி ஈமெயிலும் செய்து வருகிறோம். ஒருவேளை அவர் அமீரகத்தில் இல்லமால் இருக்கலாம், அல்லது அவர் மொபைல் எண்ணை மாற்றியிருக்கலாம், இருப்பினும் நாங்கள் அவரை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம்” என்றார்.
தொடர்புக் கொள்ள முடியாத வெற்றியாளர்களைக் கண்டறிய பிக் டிக்கெட் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்த்துள்ளது. வெற்றிபெற்ற அதிர்ஷ்டசாலிகளான கம்மு குட்டி மற்றும் ஸ்ரீந்தரனை உங்களுக்குத் தெரிந்தால், help@bigticket.ae என்ற ஈமெயிலுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது 022019244 என்ற எண்ணிற்கு அழைக்கவும் என்று பிக் டிக்கெட் டிரா குழு அறிவித்துள்ளது.