UAE Tamil Web

அபுதாபி பிக் டிக்கெட் டிரா: வெற்றிப்பெற்ற தொகையில் வயதான பெற்றோருக்கு உதவும் இந்தியர்!

அபுதாபியில் பிக் டிக்கெட் டிராவில் துபாயில் பணியுரியும் இந்தியர் ஒருவர் 12 மில்லியன் திர்ஹம்ஸ் வென்றுள்ளார்.

பிக் டிக்கெட் டிராவில் 192202 என்ற டிக்கெட்டை வைத்திருந்த முகமது சமீர் ஆலன், நேற்று நடைபெற்ற குலுக்கல்லில் மெகா பரிசான 12 மில்லியன் திர்ஹம்ஸை வென்றார்.

துபாயில் தொழில்நுட்ப வல்லுநராக மாதம் 3,300 திர்ஹம்ஸ் சம்பாதிக்கும் சமீர், வெற்றி பெற்ற டிக்கெட்டை ஆறு பேருடன் பகிர்ந்து கொண்டதாக கூறினார். டிக்கெட்டின் பாதி விலையை 500 திர்ஹம்ஸ் கொடுத்து அவர் வாங்கியதால் வெற்றி பெற்ற 12 திர்ஹம்ஸில் அவரக்கு பங்கு 6 மில்லியன் ஆகும்.

வெற்றி பெற்ற தொகையில், எனது மனைவியை துபாய்க்கு அழைத்து வர விரும்புகிறேன், துபாயின் அழகு என்ன என்பதை காட்ட விரும்புகிறேன், மேலும் இந்த தொகையின் முலம் எனது வயதான பெற்றோருக்கு உதவ விரும்புவதாக தெரிவித்தார்.

முன்னதாக இந்தியாவில் விவசாயம் செய்து வந்த சமீர், தனது வெற்றித் தொகையில் சிலவற்றை தனது மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் விவசாயத்தில் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap