UAE Tamil Web

அபுதாபி பிக் டிக்கெட் டிரா: 5 வருட விடாமுயற்சியால் 3 லட்சம் திர்ஹம்ஸ் வென்ற இந்தியர்

அபுதாபி பிக் டிக்கெட், எமிரேட்ஸ் டிரா, மஹ்சூஸ் டிரா போன்ற வாராந்திர டிராவில் ஏராளமான மக்கள் உலகம் முழுவதிலும் இருந்து ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் அபுதாபி பிக் டிக்கெட் எலக்ட்ரானிக் டிராவில் 3 லட்சம் திர்ஹம்ஸை இந்தியர் பெற்றுள்ளார்.

அபுதாபியில் பணிபுரிந்து வரும் அஜீஸ் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக அபுதாபி பிக் டிக்கெட் டிராவில் கலந்துக்கொண்டு வெற்றி பெறாமல் இருந்துள்ளார். தற்போது நடந்த டிராவில் 3 லட்சம் திர்ஹ்மஸை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து தெரிவித்த அஜீஸ், “துபாயிலிருந்து இருந்து அபுதாபிக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, ​​அபுதாபி பிக் டிக்கெட் டிரா தொகுப்பாளரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நான் வெற்றிபெற்றதாக அவர் கூறும்போது என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. நீண்ட வருடமாக இதில் பங்கெடுத்து வருகிறேன், இருப்பினும் சோர்வாகமல் தொடர்ந்து கலந்துக்கொண்டதால் தற்போது வெற்றி பெற்றுள்ளேன்” என்றார்.

மேலும் “சொந்தமாக டிக்கெட் வாங்குவதற்காக 4 மாதங்களாக பணத்தை சேமித்து வருகிறேன். டிக்கெட்டை எனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பாததால் தனியாகவே டிக்கெட் வாங்கினேன். இப்போது நான் இறுதியாக வெற்றி பெற்றுள்ளேன். வெற்றிபெற்ற பணத்தை வங்கி கடனை அடைக்கப் பயன்படுத்துவேன். இந்தப் பணம் எனக்குப் பெரிதும் பயன்படும்.” என்றார் அஜீஸ்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap