UAE Tamil Web

“3 வருடக் காத்திருப்பு” – இறுதியில் 2 கோடி திர்ஹம்சை பிக் டிக்கெட்டில் வென்ற இந்தியர்..!

big ticket 20 million

அபுதாபி : ஜூலை மாதத்திற்கான (229 வது) பிக் டிக்கெட் குலுக்கல் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் அமீரக வாழ் இந்தியரான ரஞ்சித் சோமராஜன் என்பாருக்கு 20 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை கிட்டியுள்ளது.

குலுக்கலை நேரலையில் ரஞ்சித் பார்த்துக்கொண்டிருக்க, அவர் வாங்கியிருந்த 349886 டிக்கெட் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்ததும் துள்ளிக் குதித்திருக்கிறார். வெற்றி குறித்து ரிச்சர்ட் போன் செய்கையில்,” உங்களுடைய அழைப்பிற்காக கடந்த 3 ஆண்டுகளாக காத்திருந்தேன்” என ரஞ்சித் தெரிவித்தார்.

ஜூன் 29 ஆம் தேதி இந்த டிக்கெட்டை தான் வாங்கியதாகவும் இந்தப் பரிசுத்தொகையை 10 பேருடன் பகிர்ந்துகொள்ள இருப்பதாக அவர் குறிப்பிட்டார். டிராவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசை வென்றவர்களின் பெயர்களும் நேற்று அறிவிக்கப்பட்டன.

துபாயில் வசித்துவரும் இந்தியரான ரென்ஸ் மேத்தியூ 3 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்றுள்ளார். இவர் 355820 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியிருந்தார்.

மூன்றாம் பரிசான 1 மில்லியன் திர்ஹம்ஸ் தொகையை கத்தாரில் வசித்துவரும் இந்தோனேஷிய நபரான ஜெசமின் ஜெய்ன் தட்டிச் சென்றார். அவர் 006863 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

big ticket 20 million
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap