UAE Tamil Web

அதானி குழுமத்துக்கு அடித்த அதிஷ்டம்.. ரூ.15400 கோடிக்கு முதலீடு செய்யும் அபுதாபி நிறுவனம்

அபுதாபியை சேர்ந்த இன்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம் அதானி குழுமத்தைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களில், 15,400 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.

இது குறித்து கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் தெரிவித்து உள்ளதாவது: ஐ.எச்.சி இன்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம், அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனங்களில் தலா 3,850 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.

மேலும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 7,700 கோடி ரூபாயையும் அந்நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது.

இருப்பினும், இந்த முதலீடுகளின் மூலம் 3 நிறுவனங்களின் எத்தனை சதவீத பங்குகள் ஐ.எச்.சி நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap