UAE Tamil Web

அமீரகத்தின் கனவுத் திட்டம்.. முடிவுக்குவந்த அபுதாபி-துபாய் எதிஹாட் ரயில்வே டிராக்

அமீரக அரசால் அபுதாபியிலிருந்து துபாய் இடையே அமைக்கப்பட்டு வந்த எதிஹாட் ரயில் பாதை அமைக்கும் பணிய தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் அபுதாபி மற்றும் துபாய் நேரடி ரயில் பாதையால் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில வருடங்களில் எதிஹாட் ரயில் சேவை தொடங்கப்பட இருப்பதால் அபுதாபி – துபாய்க்கு 50 நிமிடங்களில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

தேசிய ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக அமீரகத்தின் தலைநகர் அபுதாபி மற்றும் துபாய் இடையேயான இந்த ரயில் பாதையை உருவாக்க 47 மில்லியன் வேலை நேரம் மற்றும் 27 மாதங்கள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் கட்டுமான பணியில் 13,300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், 256 கி.மீட்டர் நீளமுள்ள இந்த ரயில் பாதையில் 29 பாலங்கள், 60 குறுக்கு சாலியகள் மற்றும் 137 கால்வாய்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Image

துபாயின் துணை ஆட்சியாளரும், துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், அபுதாபி எதிஹாட் ரெயில் தலைவர் ஷேக் தியாப் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன், அபுதாபியிலிருந்து துபாய் இடையே அமைக்கப்பட்டு வந்த எதிஹாட் ரயில் பாதை நேரில் கண்டதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த டிவிட்டில், “அபுதாபி மற்றும் துபாய் இடையேயான ரயில் பாதையை நிறைவு செய்திருப்பது எதிஹாத் ரயில்வேக்கு பெரிய சாதனையாகும். இதனால் பொருளாதார மற்றும் மேம்பாட்டு நன்மைகள் பல ஆண்டுகளாக நீடிக்கும் மற்றும் அமீரகத்தின் தன்மை உயரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 2021 இல் அமீரக அரசாங்கத்தால் இந்த எதிஜாட் தேசிய ரயில்வே திட்டம் தொடங்கப்பட்டது.

Image

சவுதியின் எல்லைப் பகுதியான அல் சிலா முதல் புஜைரா வரையிலான 11 நகரங்களை இணைக்கும் இந்த ரயில் சேவை, 400 பயணிகள் பயணிக்கும் வசதிக் கொண்டது. மேலும் எதிஹாட் ரயில் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பயணிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

25 Shares
Share via
Copy link