UAE Tamil Web

உலகின் பாதுகாப்பான நகரங்கள் – சீன, ரஷ்யத் தலைநகரை பின்னுக்குத் தள்ளிய அபுதாபி, துபாய்!

பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தி எக்னாமிஸ்ட் குரூப் ஊடக நிறுவனத்தின் புலனாய்வு பிரிவு சார்பில் ஆண்டுதோறும் உலகின் பாதுகாப்பான நகரங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்படுகிறது. டிஜிட்டல், சுகாதாரம், உள்கட்டமைப்பு, தனிமனித மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் பாதுகாப்பான இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் முதலிடம் பிடித்துள்ளது. கனடாவின் டொராண்டோ, சிங்கப்பூர், சிட்னி, டோக்கியோ ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.

Chart: The World's Safest Cities | Statista
Courtesy: Statista

உலகளவில் 66.9 புள்ளிகளுடன் அபுதாபி 31வது இடத்திலும் துபாய் 64.6 புள்ளிகளுடன் 35வது இடத்திலும் உள்ளது. துபாய்க்கு அடுத்த இடத்தில் சீன தலைநகர் பெய்ஜிங் 36வது இடத்திலும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ 38வது இடத்திலும் உள்ளது. இந்திய தலைநகர் டெல்லி 48வது இடத்தையும், வர்த்தக நகரான மும்பை 50வது இடத்தையும் பிடித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் அபுதாபி, துபாய் ஆகியவை முதல் 2 இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link