UAE Tamil Web

அபுதாபி வருவோருக்கான பயண விதிமுறைகளில் மாற்றம் ; அபுதாபி வந்தவர்களுக்கு கூடுதல் PCR டெஸ்ட் தேவையில்லை..!

abudhabi

வெளிநாடுகளிலிருந்து அபுதாபி வருவோர் மற்றும் பிற எமிரேட்களில் இருந்து அபுதாபி வருவோர் பின்பற்றவேண்டிய புதிய பயண விதிமுறைகளை அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை கமிட்டி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்ட அமீரக குடிமக்கள், குடியிருப்பாளர்கள், வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் ஆகியோர் அபுதாபிக்கு நுழைய விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் நடைபெற்றுவரும் தடுப்பூசி ஆய்வில் பங்கேற்ற தன்னார்வலர்கள் மற்றும் அரசின் தடுப்பூசி திட்டத்தின் மூலம் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் தங்களுடைய அல்ஹோஸன் அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் மற்றும் E அல்லது தங்க ஸ்டார் ஐகான் வைத்திருக்கும் பட்சத்தில் அவர்கள் அபுதாபிக்குள் நுழையலாம்.

இதற்காக ஒரு முறை மட்டும் பிசிஆர் சோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த E மற்றும் தங்க ஸ்டார் ஐகான் 7 நாட்கள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

இவர்கள் (தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள்) அபுதாபிக்கு வந்ததற்குப் பின்னால் PCR சோதனை எதுவும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என கமிட்டி அறிவித்துள்ளது. அதேபோல வெளிநாட்டிலிருந்து அபுதாபிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத குடிமக்கள், குடியிருப்பாளர்கள் அபுதாபி திரும்புவதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள பயண நடைமுறைகள் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது அபுதாபிக்கு நுழைவதற்கு முன்னர் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை அல்லது 24 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட டிபிஐ சோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

அபுதாபியில் அவர்கள் தொடங்கும் பட்சத்தில் கூடுதல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

நெகட்டிவ் பிசிஆர் முடிவுகளைக் கொண்டு அபுதாபிக்கு நுழைந்தவர்கள் நான்கு மற்றும் எட்டாவது நாளில் மீண்டும் பிசிஆர் பரிசோதனையை எடுத்துக்கொள்ளவேண்டும்.

டிபிஐ பரிசோதனை முடிவுகளை கொண்டு அபுதாபிக்கு நுழைந்தவர்கள் 3 மற்றும் 7 நாளில் மீண்டும் ஈசிஆர் பரிசோதனையை எடுத்துக்கொள்ளவேண்டும்.

டிபிஐ முடிவுகளைக் கொண்டு அடுத்தடுத்து இரண்டு முறை அபுதாபிக்கு நுழைய முடியாது.

அபுதாபி வந்ததற்கு பின்னால் எடுக்க வேண்டிய பிசிஆர் பரிசோதனையை எடுக்கத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

abudhabi
24 Shares
Share via
Copy link